கோவை,காளப்பட்டி ரோட்டில் உள்ள டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில், மாணவர் புகார் குழு, போதைப் பொருள் தடுப்பு குழு, பகடிவதை குழு மற்றும் சைபர் குற்றத் தடுப்புக் குழு இணைந்து கல்லூரி மாணவிகளுக்கு இளம் தலைமுறையினருக்கான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநகரக் காவல் கமிஷனர் பாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி .ஜி.பி.கலையரங்கில் நடைபெற்றது. இதில் கல்லூரி இயக்குநர் முனைவர் பெ.இரா.முத்துசாமி வரவேற்புரை வழங்கினார். நிகழ்வில் .கல்விக்குழு செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி . கல்விசார் இயக்குநர் மதுரா ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் தொடக்கமாக, கல்லூரி அறக்கட்டளை தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி தலைமையுரையில், இந்த உலகில் நம்முடைய நாடு தற்போது வளர்ச்சி பெற்று வளர்ந்த நாடாக மாறியிருக்கிறது என்றார். பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம் மற்றும் கடமையும் என்றார். இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு சமூகத்தில் பெண்களைப் பார்க்கின்ற பார்வை சரியானதாக இருக்க வேண்டும் என்ற கருத்தினை உரையில் பதிவு செய்தார். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாக நமது தேசத்திலிருந்து ஒழித்துவிடுதல் வேண்டும் எனவும் அப்பொழுதுதான் இளம் தலைமுறையினரின் வாழ்வு சீரியதாக இருக்கும் என்றார்.தொடர்ந்து மாநகர வடக்கு துணை காவல் ஆணையர் முனைவர் ஆர்.ஸ்டாலினுக்கு.கல்விக்குழு இயக்குநர் முனைவர் பெ.இரா.முத்துசாமி பொன்னாடை அணிவித்தார், மாநகர துணை காவல் ஆணையர் .வி.சுஹாசினி சிறப்புரை வழங்கினார். அவரது உரையில், சமூகத்தில் தற்போது ஆண், பெண் பாகுபாடின்றி பழக வேண்டிய சமத்துவமான சூழல் நிகழ்கிறது. அச்சூழலில் பெண்கள் தங்களுக்கென ஒரு வரையறைக்குள் பழக வேண்டும் என்றார். அதனைமீறும்பொழுது பிரச்சினைகள் நிகழுகின்றன என்றார். பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளைக் கவனமாகக் கையாள வேண்டும் என்றார். ‘போலீஸ் அக்கா’ என்ற செயலி பெண்களுக்கு அவசர நேரங்களில் உதவிடும் திட்டம் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றார். ஒவ்வொரு கல்லூரிக்கும் தனிப்பட்ட பெண் காவலர்கள்,அதிகாரி நியமிக்கப்பட்டுள்னர். அவர்களிடம் கல்லூரி மாணவிகள் தங்களுக்கு ஏற்படுகின்ற தனிப்பட்ட சொல்ல இயலாத சமூகம் சார்ந்த பிரச்சினைகளைக் கூறித் தீர்வு கண்டு கொள்ளலாம் என்றார். போராட்ட குணம், விடா முயற்சி, கடின உழைப்பு இவை இருந்தால் வாழ்வில் நிச்சயாக வெற்றி பெறலாம் என்றார். எஸ்ஓஎஸ் என்ற அப்ளிகேஷனை செல்பேசியில் பதிவிறக்கம் செய்து காவல்துறையை உடனடியாகத் தொடர்பு கொண்டு பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்றார். தொடர்ந்து துணை காவல் ஆணையர் முனைவர் ஆர்.ஸ்டாலின் சிறப்புரை வழங்கினார். அவர் தமது உரையில், பெண்கள் தைரியத்துடனும் வீரத்துடனும் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும் என்றார், மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் உரையில், கல்லூரி மாணவிகள் சமூகத்தில் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்கள் அவற்றை எதிர்கொள்ளும் விதம், தைரியத்தை வளர்த்துக் கொள்ளும் திறன் குறித்து பேசியவர், சமூக வலைத்தளங்களில் ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்த்துப் போராட வேண்டும்.மேலும் காலம்காலமாகப் பெண்கள் சார்ந்து சில கற்பிதங்கள் சமூகத்தில் கூறப்பட்டு வந்திருக்கின்றன. அவற்றை முழுவதுமாக நம்பாமல் பெண்கள் புதிய சிந்தனையுடன் இச்சமூகத்தை நோக்குகின்ற திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்,இதனை அடுத்து கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் மாணவிகள் தங்களுடைய வாழ்வில் சந்தித்த பாலியல் சார் இன்னல்கள் அவற்றின் சமூகம் சார்ந்த பார்வை பற்றி உரையாடித் தங்களுடைய சந்தேகங்களுக்கு தீர்வு கண்டனர். மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகக் குறும்படம் திரையிடப்பட்டது. ‘போலீஸ் அக்கா’ என்னும் அமைப்பின் செயல்பாடு குறித்து மாணவிகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக இந்நிகழ்வு இருந்தாக கூறினர். இதே போன்று பிற கல்லூரியிலும் மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தைரியமாக போலீஸ் அக்கா , பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரியிடம் பெண்கள் கூறலாம் என்றார். கோவை மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியாகப் பெண் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.முடிவில் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் எஸ். சரவணன் நன்றி கூறினார், மாணவிகள் கூறுகையில் போலீஸ் அக்கா பற்றிய விழிப்புணர்வு நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்தார்கள்..