சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலகமே வியந்து பார்க்கும் ஒன்றாக நிற்கிறது. உலக புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து செல்கின்றனர். தமிழ்நாட்டின் முத்திரையாக விளங்கும் இந்த கோயில் பல வரலாற்று சிறப்பம்சங்களையும் பெற்றுள்ளது. மதுரைக்காரர்கள் மட்டுமில்லை ஒட்டுமொத்த தமிழர்களும் இதை நினைத்து பெருமை கொள்கின்றனர். எனவே இந்த பதிவில் கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வரலாற்று பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள். சித்திரை திருவிழா தொடங்கி இங்கு நடைபெறும் திருத்தேர் பவனி, ஆவணி மூல திருவிழா, தை தெப்பத் திருவிழா, ஆடிப்பூரம் ஆகியவை மிகவும் விசேஷம் கொண்டவை.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மொத்தம் 65,000 சதுர அடிப் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆகம விதிகளை கடுமையாகக் கடைப்பிடித்துக் கட்டப்பட்ட இந்த கோயிலின் முக்கிய வரலாறு இதுதான். அன்னை பார்வதியின் மறு உருவமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோலத்தில் வந்த சிவனை திருமணம் செய்து கொண்டு மதுரைக்கு, மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற கோலத்தில் வந்தார். தெய்வ மகளான மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரான சிவனுக்கும் மதுரையில் கட்டப்பட்ட கோயில் தான் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சிலை மரகத கல்லால் வடிவமைக்கப்பட்டவை. பக்தர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்து தரிசித்தாலும் அம்மன் ஜொலிப்பது போன்று காட்சியளிப்பார். கோயிலின் உள்ளே அமைந்திருக்கும் 51 சக்தி பீடங்களும் பக்தர்களால் போற்றி வணங்கப்படுகிறது. கோயில் வளாகத்தில் வலது புறத்தில் இருக்கும் நடராஜர் சிலையை பார்க்கும் போதே மனம் பரவசமடையும். நடராஜர் சிலை மற்ற கோயில்களில் இருப்பதைப் போன்று இல்லாமல் இடது காலுக்குப் பதில், வலது கால் தூக்கி நடனமாடுவது போல் வீற்றிருப்பார். ராஜசேகர பாண்டியன் வைத்த வேண்டுகோளுக்காக நடராஜர் தன் கிடது காலை ஊன்றி, வலது கால் தூக்கி ஆடிய அருள் வழங்கியதாக கூறப்படுகிறது.
madurai history
தலைமுறையை தாண்டி நிற்கும் கோபுரம்
மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கோபுரங்கள் சங்க காலத்திற்கு முன்பே கட்டப்பட்டவை. சுமார் 2300 முதல் 3600 ஆண்டுகளுக்கு பழமையானவை எனவும் ஆராய்ச்சி குறிப்புகள் கூறுகின்றன. சுவாமி கோபுரம் தொடங்கி கிழக்கு ராஜ கோபுரம், தேரடி மண்டபம், ஆறுகால் மண்டபம், அம்மன் சன்னதி கோபுரம், மேற்கு இரா கோபுரம், வீர வசந்தராயர் மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம் என மொத்த 12 கோபுரங்களை உள்ளடக்கியது மதுரை மீனாட்சி அம்மன் கோயில். இதில் தெற்கு கோபுரம் மிகவும் உயரமானது. 170 அடி உயரம் கொண்ட இக் கோபுரம், 9 நிலைகளைக் கொண்டது.
madurai temple gopuram
ஆயிரங்கால் மண்டபம்
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் பிரம்மாண்ட அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 985 தூண்கள் உள்ளன. அக்கால கட்டிடக்கலையில் மொத்த அழகையும் இது விளக்குகிறது. இந்த தூண்டுகளை ஒரு கோணத்தில் நின்று பார்த்தால், அவை ஒரே நேர்கோட்டில் இருப்பது போலத் தோன்றும். மண்டபத்தில், இன்னிசை ஒலி எழுப்பும் 22 தூண்கள் அமைந்துள்ளன. சிற்பங்கள், ஓவியங்கள், பரதக்கலை முத்திரைகள், இசைத் தூண்கள், தியான சித்திரங்கள் ஆகியவை இங்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.