மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா, காங்கேயநத்தம் கிராமத்தில், அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு சலுகைகள் பெறுவது குறித்து பேசினார்.
மேலும் இந்த கூட்டத்தின் போது காங்கேயநத்தம் பகுதி தலைவராக ராஜேந்திரன் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதில் திரளி பகுதி தலைவர் கண்ணன், மாநில தலைவரின் நேர்முக உதவியாளர் செல்லப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.