மதுரை இரயில்வே காலனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ நலம் தரும் வலம்புரி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி 8-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, விநாயகப் பெருமானுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபஆராதனை நடைபெற்றது.
பின்னர் பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் சிறுவர்,சிறுமிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் எஸ்.ஆர்.எம்.யூ கோட்டச் செயலாளர் ஜே.எம் ரபீக், பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராம், பாஜக மாநகர் மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார்,எஸ்.ஆர்.எம்.யூ மேற்கு கிளை தலைவர் சுந்தர், டாக்டர் வீரேந்திரன், எஸ்.ஆர்.எம்.யூ கோட்டத் தலைவர் செந்தில்குமார், எஸ்.ஆர்.எம்.யூ டைரக்டர் சீதாராமன்,உதவி கோட்ட செயலாளர் ஜூலியன், துளசிராமன், முனைவர் பிச்சைவேல், பொன் முனியாண்டி சுவாமி கோவில் பூசாரி ஏ.பி.குமார், ராஜசேகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் கலைச்செல்வன், ஆலோசகர்கள் சிவபாலன், சுரேஷ் பாண்டியன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.