தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில உயர்நிலைக் குழு கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி யாத்திரை நிவாஸ் கூட்டரங்கில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் மாநில தலைவர் திரு.ஆ.துரைப் பாண்டி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இதில் பொதுச் செயலாளர் டி.கே.சிவகுமார், மாநில தலைமை நிலை செயலாளர் வே.மகேந்திர குமார், மாநில துணைத்தலைவர் வா.மாரிமுத்து, திருப்பத்தூர் விநாயகம், முத்துகிருஷ்ணன்,பே.சு.சங்கரன், திருவண்ணாமலை ஆர்.பாபு,மதுரை மாவட்ட தலைவர் அ.இளங்கோ, விருதுநகர் மாவட்ட தலைவர் பாலமுருகன், சிவகங்கை வே.ரவி, தேனி குபேந்திரன் செல்வம், நெல்லைஎம்.பி. ராதாகிருஷ்ணன், தென்காசி வெங்கடேசன், வடசென்னை கவிதா, மத்திய சென்னை தவமணி, தர்மபுரி கார்த்திகேயன், கிருஷ்ணகிரி விநாயகம்,விழுப்புரம் கலியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.