மதுரை சிம்மக்கல் அருகே உள்ள அனுமார் கோயில் படித்துறையில் அருள்மிகு ஸ்ரீ வரதவிநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியின் அருள் பெற்று சென்றனர்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக இளைஞரணி மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் ராஜேஷ் கண்ணா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மதி,ராஜேஷ்,குப்பு, இரத்தினவிநாயகம், ஆறுமுகம், பிட்சாலு, அசோக் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.