மதுரை மாநகர் மாவட்ட தெற்கு 5-ஆம் பகுதி அதிமுக செயலாளர் ஜோசப் தனிஸ்லாஸ் அவர்களின் புதல்வி நிச்சயதார்த்த விழா மதுரையில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்ட மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. மணமக்கள் ஜெனிடா – ஜோன்ஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்..
இவ்விழாவில் அதிமுக நிர்வாகிகள் வி.பி.ஆர் செல்வகுமார், கறிக்கடை முத்துகிருஷ்ணன், கலைச்செல்வம், நீதிகாந்த், பாவலர் ராமச்சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்தவர்களை ஜோசப் தனிஸ்லாஸ் குடும்பத்தினர் வரவேற்றனர்.