விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மதுரையில் அகில பாரத இந்து மகா சபா சார்பாக மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி ராஜா தலைமையில் 108 விநாயகர் சிலைகளுடன் மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது.
விளக்குத்தூண் பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மாசி வீதிகளில் வலம் வந்தது. ஊர்வலத்தை மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். பின்னர் வைகை ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. இவ்விழாவில் அகில பாரத இந்து மகா சபா மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தின புயல் தினசரி நாளிதழ் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்..