மயிலாடுதுறை மாவட்டம் ராதா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உதவி தலைமையாசிரியை பிரியங்கா வரவேற்று பேசினார். தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். இயக்குனர் கோகுலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் நலச் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் திருமுருகன் மற்றும் தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜெகமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நல்ல கருத்துக்களை கூறியும் ஆசிரியர் பணியின் சிறப்பையும், மாணவர்களின் நலனில் ஆசிரியர்களின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசினர்.
பின்னர் ஆசிரியர்களை வாழ்த்தி வாழ்த்து மடலுடன் இனிப்புகளை வழங்கி வாழ்த்தினர்.
நிகழ்ச்சியின் முடிவில் மூத்த ஆசிரியர் லாவண்யா நன்றியுரை கூறினார். இதில் மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அருமை நல்ல முயற்சி