இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்ஜர் நிறுவனம் பெட்கிராட் இணைந்து கெமிக்கல் இல்லாத 25 வகையான சோப்பு தயாரிக்கும் இலவச பயிற்சி நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராம் தலைமையிலும், தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள்ரூபி, பயிற்சியாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலையிலும் மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள பெட்கிராட் அலுவலகத்தில் நடைபெற்றது.
பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார். யூனியன் பேங்க் ஆப் இந்தியா முதுநிலை மேலாளர் திருமதி செல்வராணி குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.
கதர் கிராம ஆணையம் உதவி இயக்குனர் அன்புச்செழியன், இ.டி.ஐ.ஐ திட்ட அலுவலர் முனைவர் கார்த்தி, ஆகியோர் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர்:- சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதல்வர் முனைவர் கண்ணன், தமிழ்நாடு கிராம வங்கி நிதிசார் கல்வி மைய அலுவலர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசினர்.
பின்னர் இ.டி.ஐ.ஐ திட்ட அலுவலர் முனைவர் கார்த்தி பேசுகையில் :- பயிற்சிக்குப் பின் சுயதொழில் தொடங்கவும் தயாரிக்கும் பொருட்களை மார்க்கெட்டிங் செய்து பெண்கள் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைய வேண்டும். குறித்த நேரத்திற்கு வந்து மிகச் சரியாக பயிற்சியை கற்றுக்கொண்டு ஆன்லைன் மூலம் தொழிலை விரிவு படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் திறமையுடன் செயல்படுத்த வேண்டும் எனவும் பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியாளர் ஐஸ்வர்யா நன்றி கூறினார்.