மயிலாடுதுறை திமுக மாவட்ட கழக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழக விவசாய தொழிலாளர் அணி மாநில இணை செயலாளருமான ஜெகவீரபாண்டியன் சால்வை அணிவித்து வாழ்த்தினார்.
இவ்விழாவில் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் , தொழிலாளர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெகமுருகன் , மாவட்ட நிர்வாகி அல்போன்சா, பாஸ்கர் மற்றும் கழக நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் இவ்விழாவில் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சால்வை அணிவித்தும் பூங்கொத்து வழங்கியும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.