மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இதில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல்மூர்த்தி கலந்து கொண்டு கோரிக்கை மனு வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில்:- உரக்கடைகளில் அரசு அனுமதி பெறாத தரம் இல்லாத உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்கின்றனர். தொடர்ந்து தரம் இல்லாத உரங்களை பயன்படுத்தும் அந்த விவசாய நிலம் மலட்டுத்தன்மைக்கு உள்ளாகின்றன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைகின்றனர்.
எனவே தரம் இல்லாத உரங்களை விற்பனை செய்பவர்களை கண்டுபிடித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமற்ற உரங்களை விற்பனை செய்பவர்களின் விவரங்களை நாளிதழில் தெரியப்படுத்த வேண்டும்.
மேலும் விவசாயிகளும் இதுபோன்ற உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்பவர்களை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவர்களிடம் உரம் வாங்குவதை நிறுத்தி கொள்ள வேண்டும். என பேசினார்.
இக்கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க காங்கேயநத்தம் பகுதி தலைவர் இராஜேந்திரன் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.