மதுரை தமுக்கம் அரங்கில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் பி.எஸ்.மணியன் எழுதிய ஸ்ரீ ராமஜென்ம பூமி போராட்ட வரலாறு புத்தகத்தை பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம. சீனிவாசன் வெளியிட, மதுரை மாவட்ட துணைத்தலைவர் ஜி.ராஜ்குமார் பெற்றுக்கொண்டார்.
உடன் காளவாசல் மண்டல் தலைவர் பிச்சைவேல், ஐ.டி.விங் மாவட்ட பார்வையாளர் அருண்குமார், சாய் கிருஷ்ணமூர்த்தி, உமாராணி, லிங்கேஸ்வரி, புரோட்டாகால் செந்தில், விளையாட்டுப் பிரிவு மாவட்ட தலைவர் வாலிபால் செந்தில், லட்சுமி நாராயணன் மற்றும் நாகராஜ் திருமுருகன், முத்துலட்சுமி, மீனாம்பிகை, ரேணுகா, கருணாகரன், வல்லத்தரசு, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ஐயப்பராஜா, முருகன் உள்பட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.