திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டியில் திருமங்கலம் கால்வாயில் விவசாயத்திற்காக ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செல்லையா, அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல்மூர்த்தி, அனைத்து விவசாய சங்கங்களின் மாநில கவுரவத் தலைவர் எம்.பி.ராமன், அப்துல்கலாம் விவசாய சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட துணைத் தலைவி சந்திரா, செயலாளர் கோகிலா, தேனி மாவட்ட தலைவி சுப்புத்தாய், மாநிலத் தலைவரின் நேர்முக உதவியாளர் செல்லப்பாண்டி மற்றும் குணபாலன், ராஜேந்திரன், செக்கானூரணி பகுதி தலைவர் செல்லப்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து விட்டனர். இதில் கால்வாய் பாசன விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.