மதுரை சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் விரிவாக்கமாக டாக்டர் சரவணன் தலைமையில் புதிய பல் மருத்துவ மையம் திறக்கப்பட்டது.
மதுரை நரிமேடு பகுதியில் ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில் சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டாக்டர் சரவணன் தலைமையில் சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையை சேவை மனப்பான்மையுடன் “குறைந்த செலவில், குறைவில்லா மருத்துவம்” என்ற தாரக மந்திரத்தோடு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் மருத்துவ சேவையை பொதுமக்கள் சமூக சேவகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையின் விரிவாக்கமாக கடந்த 15-ம் தேதியன்று புதிதாக பல் மருத்துவ மையம் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிறுவனரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன் தலைமை வகித்தார். இம்மையத்தினை விஷ்வா அபார்ட்மெண்ட்ஸ் நிறுவனர் ரகுநந்தன் மற்றும் இன்ஜினியர் செந்தில் முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கனிமொழி சரவணன், விஜயலட்சுமி டாக்டர் முருக பொற்செல்வி, சாந்தி,ஜெயகௌரி
சுதா இளங்கோவன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
இந்நிகழ்ச்சியில் தாய் மூகாம்பிகை சேதுராமன், சாந்தி டிரஸ்ட் நிறுவனர் ஜெயக்கொடி, தனசேகரன், கிருஷ்ணா புரமோட்டர்ஸ் நிறுவனர் இளங்கோவன், டாக்டர் ஜெய விஷ்வ தர் ஷன் டாக்டர் நேஷ்மா சரவ ணன், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சரவணா மருத்துவமமனையின்
இயக்குனரும் இருதய அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் அம்ரீத்குமார் சரவணன் மற்றும் மையத்தின் பல் மருத்துவர் டாக்டர் சாதுர்யா அம்ரித் ஆகியோர் செய்திருந்தனர்.
புதிய பல் மருத்துவமனை குறித்து டாக்டர் சாதுர்யா அம்ரித் கூறுகையில், இம்மையத்தில் AI தொழில்நுட்பத்துடன் கூடிய SCAN O என்ற அதி நவீன கருவி கொண்டு நோயாளிகளின் பற்களில்
உள்ள நோய்களை துல்லியமாக கண்டறிந்து உடனடியாக நோயாளியின் செல்போனிற்கு வாட்ஸ் அப் மூலம் ரிப்போர்ட் அனுப்பப்படும். பல்வேறு பல் சம்மந்தமான நோய்களுக்கு சரவணா மருத்துவமனையின் தாரக மந்திரமான குறைந்த செலவில் குறைவில்லா மருத்துவம் அளிக்கப்படும்.
மேலும் இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.