மதுரையில் வாஸன் கண் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் இணைந்து நடத்திய ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு தலைமை மருத்துவ இயக்குனர் டாக்டர் கமல் பாபு, மூத்த மருத்துவர் கீதா மற்றும் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மதுரை மாவட்டத்தின் சார்பாக மாவட்ட தலைவர் வீ.கணேசன், மாவட்டச் செயலாளர் சே.கார்த்திக், மாவட்ட பொருளாளர் மு. கார்த்திகேயன் மற்றும் பொறுப்பாளர்கள் இணைந்து 75 பட்டதாரி ஆசிரியர்களுக்கு வாசன் கண் மருத்துவமனையின் சார்பாக நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.