நாகை மாவட்டம் கீழையூர் அருகே வாழக்கரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வாழக்கரை ஊராட்சியில் 4வது வார்டு பணிதள பொறுப்பாளராக பணியாற்றி வந்த மாலா என்பவரை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும், 4வதுவார்டு பணிதள பொறுப்பாளராக மீண்டும் நியமிக்க வேண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் செல்வம் தலைமையில் வாழக்கரை கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் நடைப்பெற்றது.
இதில் நூறு நாள் வேலை செய்தும் இரண்டு மாத காலம் ஊதியம் வழங்கவில்லை எனவும் மேலும் ஊராட்சி மன்ற தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த சாலைமறியல் போராட்டம் சுமார் ஒருமணி நேரம் வரை நீடித்தது. இதில் தமிழ் மாநில விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஹாஜா அலாவுதீன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் ராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சங்கர், மேலவாழக்கரை ஊராட்சி வார்டு உறுப்பினர் ரவி, வாழக்கரை கிளை செயலாளர் ரவி, அனை த்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய துணை செயலாளர் தினேஷ் மற்றும் வாழக்கரை கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.