மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் அமைந்துள்ள மனித நேய அரவணைப்பு இல்லத்தில் ஆதரவற்ற முதியவர்களுடன் திருமணநாள் கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் கொழுந்துறை கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் கவிப்பிரியாவின் முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, மயிலை கருணைக்கரங்கள் அறக்கட்டளை மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக, பொறையாரில் அமைந்துள்ள மனிதநேய அரவணைப்பு இல்லத்தில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்களுக்கு இனிப்புகள், உணவு, தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.
பின்னர் ஆதரவற்ற முதியவர்களுடன் கேக் வெட்டி திருமண நாள் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மயிலை கருணைக்கரங்கள் அறக்கட்டளை மயிலாடுதுறை மாவட்ட நிறுவனர் தஞ்சை மகாதேவன் மற்றும் அவரது துணைவியார் ராஜேஸ்வரி, நாகப்பட்டினம் இறையன்பு அறக்கட்டளை நிறுவனர் செந்தமிழ் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.