தமிழ்நாடு விஸ்வகர்ம மகாஜன மத்திய சங்கம் சார்பாக நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ வழங்கினார்
தமிழ்நாடு விஸ்வகர்ம மகாஜன மத்திய சங்கம் சார்பாக விஸ்வகர்மா ஜெயந்தி விழா,டாக்டர் பி.எஸ் நாதன் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் ஏழை எளியவர்களுக்கு அரிசி மற்றும் பலசரக்கு பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாநிலத் தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள் கலந்து கொண்டு ஆசீர்வாதம் வழங்கினார்.
இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் பொன்ராஜ், மாநில துணை பொதுச்செயலாளர் சங்கரன், பொருளாளர் ஆறுமுகம், மதுரை மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அதிமுக மாவட்ட பொருளாளர் பா.குமார்,வி.பி.ஆர். செல்வகுமார், நிரஞ்சன், பாவலர் ராமச்சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தின புயல் செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் கனகராஜ்