மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கத்தின் மைய நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மதிச்சியம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அனைத்து துறை வாரியான கோரிக்கை குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது. செயல் திறனற்ற பணியாளர்களுக்கு அரசாணை 338 இன் படி மீண்டும் 1,900 ரூபாய் வழங்க வேண்டும்.
ஐ டி ஐ கல்வி தகுதியாக கொண்ட பணியாளருக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்க வேண்டும்.
வேலை வாய்ப்பு மூலமாக பணியில் சேர்ந்த தினக்கூலி பணியாளர்களை காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். நகர சுகாதார செவிலியர் மற்றும் பகுதி சுகாதார செவிலியருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
ஓய்வு பெறும் அனைத்து பணியாளருக்கும் அன்றே பணி பலன்களை வழங்கிட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இது குறித்து வரும் தினங்களில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் அவர்களை சந்தித்து முறையிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சங்கத்தலைவர் சி.எம் மகுடீஸ்வரன், செயலாளர்
கே.கண்ணன், பொருளாளர்
கே.டி துரைக்கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.