உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மதுரையில் முருகன் டிராவல்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மதுரை சங்கமம் இணைந்து, மதுரை அழகர் கோயில் ரோடு கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஜோ பிரிட்டோ சோசியல் டிரஸ்ட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக ஒரு நாள் சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.
குழந்தைகளை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் தொடக்க விழா மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள முருகன் டிராவல்ஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரோட்டரி துணை ஆளுநர் ராஜேஷ் கண்ணா மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், முருகன் டிராவல்ஸ் நிர்வாக இயக்குநருமான விஸ்வநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
மூன்று மினி பஸ்களில்
குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டு திருமலை நாயக்கர் மஹால், ராஜாஜி பூங்கா, காந்தி மியூசியம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு சென்று சுற்றி காண்பித்தனர்.
இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் முருகன் டிராவல்ஸ் நிர்வாகிகள் இணைந்து குழந்தைகளுடன் ஒரு நாள் பொழுதை கழித்தனர். பின்னர் விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி சங்க தலைவர் கணேசன், செயலாளர் பாஸ்கர், பொருளாளர் சேகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், உறுப்பினர்கள் ராஜன், பிரவீன்,ராஜ்குமார், ஜ.சி.ஐ.சி.ஐ இன்சூரன்ஸ் கம்பெனி மண்டல தலைவர் சுரேஷ்குமார் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மதுரை பாண்டியன் சிறப்பு புராஜக்ட் டைரக்டர் ரோட்டரியன் ஜெகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் ஜோ பிரிட்டோ சோசியல் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர்கள் அமலா செர்லின் மற்றும் ஆசிரியைகள் நன்றியுரை கூறினர்