தேசிய இரத்ததான தினத்தை முன்னிட்டு, மதுரையில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்களும் இணைந்து சுந்தரராஜபுரம், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பத்மாலயா மெடிக்கல் சென்டரில் உள்ள ரோட்டரி இரத்த வங்கிக்காக மெகா இரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி தலைமை விருந்தினராக கலந்து கொண்ட ரோட்டரி ஆளுநர் Rtn.இராஜா கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
சேர்மன் Rtn.RMA.ராஜேஷ் கண்ணா, கன்வீனர் Rtn.ஜெயசீலன், டாக்டர் Rtn.கு௫சுந்தர், மதுரை ரோட்டரி சங்கங்களின் கூட்டமைப்பு ஒ௫ங்கினைப்பாளர்கள்
Rtn.தாஸ், Rtn.பில்லி, Rtn.பிரவீன், Rtn.சுகுமார், Rtn.ஆனந்த் உள்பட உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் அனைத்து ரோட்டரி சங்கங்கள் இணைந்து 70-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இரத்ததானம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.