“குருசிஷ்யா” கைவினை கலைஞர்கள் ஜூட் பேக் பயிற்சி துவக்க விழா
ஹான்ட் கிராப்ட் சர்வீஸ் சென்டர் – பெட்கிராட் இணைந்து மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் திட்டத்தை செயல்படுத்தும் துவக்க விழா , பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராம் தலைமையிலும், நிர்வாகிகள் கிருஷ்ணவேணி சாராள்ரூபி ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது. பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார்.
ஹான்ட் கிராப்ட் சர்வீஸ் சென்டர் உதவி இயக்குனர் ரூப் சந்தர் சுயதொழில் துவங்கி தமிழ்நாடு மற்றும் கேரளா – ஆந்திரா – கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களிலும் தொழிலை அபிவிருத்தி செய்து சுயதொழில் முனைவோராக மாறுவதின் முக்கியம் குறித்து சிறப்புரையாற்றினார்.
ஹேன்ட் கிராப்ட் சர்வீஸ் அலுவலர் பிரதிக்ஷா ஜூட் பேக் தயாரிப்பு – சந்தைப்படுத்துதல் பற்றியும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் ஜெயித்துக் காட்டலாம் என ஊக்கமாக பேசினார்.
இந்திய அரசு கதர் கிராம ஆணையத்தின் உதவி இயக்குனர் கலிபர் ரஹ்மான் திட்டத்தை விளக்கி பேசினார். மதுரை மாவட்ட தொழில் மையம் உதவி பொது மேலாளர் ஜெயா மானியத்துடன் வங்கி கடன் பெறுவது பற்றிய தகவல்களையும் – சுயதொழில் துவங்குவதின் அவசியத்தையும் விளக்கி பேசினார்.
சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதல்வர் கண்ணன் பழமை வாய்ந்த பொருட்கள் அயல்நாடுகளில் அதிகமாக பயன்படுத்துகிறது என பேசினார்.
பூம்புகார் மேலாளர் சோலைராஜ் , பயிற்சியாளர் சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் கண்ணன் நன்றி கூறினார்.
தின புயல் செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் கனகராஜ்