இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்ஜர், பெட்கிராட் இணைந்து சிறுதானிய உணவு பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராம் தலைமையிலும், தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள்ரூபி, பயிற்சியாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலையிலும் மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள பெட்கிராட் அலுவலகத்தில் நடைபெற்றது.
பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார். மாவட்ட தொழில் மைய உதவி பொது மேலாளர் எம்.ஜெயா மற்றும் இ.டி.ஐ.ஐ திட்ட அலுவலர் ரஞ்சித்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட தொழில் மைய உதவி பொது மேலாளர் ஜெயா பேசுகையில், சுயதொழில் தொடங்குவதற்காக பயிற்சி பெற வந்துள்ள நீங்கள் முறையான பயிற்சி பெற்று தொழில் தொடங்குவதற்கு நாங்கள் உதவிகள் செய்ய தயாராக உள்ளோம் என பேசினார். சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் முதல்வர் எம் கண்ணன் பேசுகையில், பெண்கள் சாதனை படைக்க வேண்டும் என்ற முனைப்புடன் வழங்கப்படும் அருமையான இப்பயிற்சியை பயன்படுத்தி நீங்கள் சாதனையாளர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என பேசினார்.
இ டி ஐ ஐ திட்ட அலுவலர் ரஞ்சித் குமார் பேசுகையில், சிறுதானிய உணவு பொருட்கள் தயாரிப்பதற்காக வழங்கப்படும் இப்பயிற்சியை தினமும் குறித்த நேரத்திற்கு வந்து பயிற்சி பெற்று சுயதொழில் தொடங்க வாழ்த்துகிறேன் என பேசினார்.
தமிழ்நாடு கிராம பேங்க் அலுவலர் முத்துகிருஷ்ணன் பேசுகையில் சுயதொழில் பயிற்சி பெற்ற பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கி சாதனை படைக்க வேண்டும் என பேசினார்.
நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியாளர் சங்கரி நன்றி கூறினார்.