திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குல்லிசெட்டிபட்டியில் சாயும் நிலையில் மின்கம்பங்கள்..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குல்லிசெட்டிபட்டியில், அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல்மூர்த்தி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அவரிடம் விவசாயிகள் கூறுகையில், குல்லிசெட்டிப்பட்டியில் 8 க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாயும் நிலையில் உள்ளது.எந்த நேரத்திலும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும் பலன் இல்லை. எனவே மின் கம்பங்களை மாற்றி தர வேண்டும்.
மேலும் இப்பகுதியில் நீர்த்தேக்க மேல்நிலைத் தொட்டி இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளது. மேலும் புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டியும் அதை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை. எனவே புதிய நீர்த்தேக்க தொட்டியை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
மேலும் சாக்கடையில் கழிவு நீர் செல்ல வழி இல்லாததால் தேங்கி கிடக்கிறது. மேலும் குடிதண்ணீர் உடைந்து உள்ளதால் தண்ணீர் சரிவர வருவதில்லை. தண்ணீரைத் தேக்குவதற்காக வைக்கப்பட்ட சின்டெக்ஸ் தொட்டிகளும் உடைந்து உள்ளது. இதனால் மக்கள் குடிநீருக்காக அலையும் சூழ்நிலையில் உள்ளனர். எனவே புதிய சின்டெக்ஸ் தொட்டி அமைக்க வேண்டும். என்று கூறினர்.
இந்நிகழ்வின் போது அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட மகளிரணி துணைத் தலைவி சந்திரா, மாவட்ட செயலாளர் கோகிலா, மாவட்ட பொருளாளர் கமலா, தேனி மாவட்ட தலைவி சுப்புத்தாய் மற்றும் குணாளன் உள்பட விவசாயிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.