மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தாசில்தார் மனேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் வனத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநிலத் தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் சம்பந்தமாக பேசினார்.
அவர் பேசுகையில் சின்ன உலகானி பகுதியில் குண்டாறு ஓடை செல்கிறது. இந்த ஓடையை ஒட்டி ரோடு போட்டு ஓடையை சுருக்கி விட்டனர். மேலும் பெரிய பாறை ஒன்று இருந்தது. அந்த பாறையை வெடி வைத்து தகர்த்து அதையும் எடுத்து சென்று விட்டனர்.
அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காங்கேயநத்தம் கிராமம் சிந்துபட்டி கண்மாய்க்கு செல்லும் ஓடை மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அதை சரி செய்ய வேண்டும் என பேசினார்.
இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.