மயிலாடுதுறை மாவட்டம் வடகிழக்கு பருவமழை 2024- ஆம் ஆண்டு மழை,புயல்,வெள்ளம், இடி, மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகள் தொடர்பான அனைத்து புகார்களையும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்- 04364-222588 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்- 04364-1077 என்ற எண்களுக்கு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.
மேலும் காவல்துறை கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொள்ள -9442626792 என்ற எண்ணிலும், மின்சாரத்துறை கட்டுப்பாட்டு அறையினை பொருத்தவரை மயிலாடுதுறை கோட்டத்திற்கு-04364-252218, 9498482319 என்ற எண்ணிலும், சீர்காழி கோட்டத்திற்கு – 04364-279301,9445854006 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டு அறையினை பொருத்தவரை மயிலாடுதுறை கோட்டத்திற்கு – 04364222277,8668171501 என்ற எண்ணிலும், சீர்காழி கோட்டத்திற்கு -04364-276336,9842382883 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.