ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னதாக வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் கட்சியின் நிறுவனத் தலைவர் குணசேகரன் நாயுடு கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார். இக்கூட்டத்திற்கு கட்சியின் கௌரவ ஆலோசகர் தேனி நாராயண சுவாமி தலைமை வகித்தார்.
மதுரை மண்டல தலைவர் எவர்கிரீன் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
இதில் மாநிலச் செயலாளர் சண்முகம், தலைமை நிலைய செயலாளர் ஜெய்சங்கர், மாநில அமைப்பு செயலாளர் பெருமாள் உள்பட திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருச்சி, தேனி, மதுரை, வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் மதுரை மண்டல செயலாளர் பார்மா ராதாகிருஷ்ணன் நன்றியுரை கூறினார்.
தின புயல் செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் கனகராஜ்