எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையை ஸ்டாலின் அரசு பின்பற்றி இருந்தால் தமிழகத்தில் காய்ச்சலால் சிறுவன் பலி ஏற்பட்டிருக்காது. அதிமுக மருத்துவரணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் கடும் குற்றச்சாட்டு..!
மதுரை அக்டோபர் 20
எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையை ஸ்டாலின் அரசு பின்பற்றி இருந்தால் தமிழகத்தில் காய்ச்சலால் சிறுவன் பலி ஏற்பட்டிருக்காது. அதிமுக மருத்துவரணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் கடும் குற்றச்சாட்டை கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் கூறியதாவது;
தற்போது தமிழகத்தில் 2,127 சுகாதார நிலையம், நகர்ப்புற சுகாதார நிலையம் 8,714 துணை சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள், வட்டம் சாராத மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள் என தமிழகத்தில் 11,333 மேல் அரசு மருத்துவமனைகள் உள்ளது.
கடந்த அம்மா ஆட்சியில் காலத்தில் 31,250 மருத்துவ காலிபணியிடங்கள் நிரப்பப்பட்டது. கடந்த எடப்பாடியார் ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு ஆண்டில் ஒரு கோடியே 50 லட்சம் உள்நோயாளிகளும், 4 கோடி மேல் வெளி நோயாளிகளும் சிகிச்சை பெற்று வந்தனர்.
ஆனால் ஸ்டாலின் திமுக ஆட்சியின் இந்த மூன்னறை ஆண்டுகளில் வெறும் 6,700 மருத்துவகாலி பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப்பட்டது, ஆனால் 36,000 பணி பணி இடமாற்றம் செய்யப்பட்டது இதை கூட அமைச்சர் மா.சு. சாதனையாக சொல்கிறார்.ஆனால் தொடர்ந்து மருத்துவத்துறையில் சருக்கல் தான் ஏற்பட்டு வருகிறது.
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் கடந்த 4ம் தேதி ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டு இருந்தார்,அதில் தமிழகத்தில் டெங்கு, மலேரியா, ப்ளூ காய்ச்சல், சிக்கன்குனியா மற்றும் விஷ காய்ச்சல் பரவி வருகிறது இதன் மூலம்,குழந்தைகள் முதல் முதியோர் வரை பாதிப்பு ஏற்படும்.மேலும் அரசு மருத்துவமனையில் உரிய மருந்துகள் இல்லை ஒரே ஊசியை தான் பல பேருக்கு பயன்படுத்தி வருவார்கள், மேலும் கழிவுநீர்களை உடனே அப்புறப்படுத்தி, தேவையான கொசு மருந்துகள் தெளித்து,ப்ளீசிங் பவுடர் ஆகியவற்றை தூவி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால் ஸ்டாலின் திமுக அரசு,
எடப்பாடியார் வெளியீட்ட அறிக்கை பின்பற்றாமல் இருப்பதால் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது.இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியம், குள்ளப்புரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 10 வயது உள்ள மோகித் குமார் என்ற சிறுவன் கடந்த 14ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ,இதனை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் இறந்துள்ளார் .அது மேலும் அதே பகுதியை சேர்ந்த 2 பேர் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதுமட்டுமல்ல அது கடந்த 2023 ஆண்டு , டிசம்பரில் திருவள்ளுவர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் பிளீச்சிங் போடு பதிலாக மைதா மாவு தூவப்பட்டது, அதேபோல் தற்போது தாம்பரம் மாநகராட்சியில் சேலையூர் ஏரி பகுதியில் அதேபோலத்தான் ப்ளீச்சிங் பவுடர் பதிலாக மைதா மாவு தூவப்பட்டுள்ளது இதன் மூலம் மக்கள் உயிரில், ஸ்டாலின் திமுக அரசு விளையாடுகிறது.
ஆகவே தொடர்ந்து முதலமைச்சரும், துறை அமைச்சரும் பேட்டி, அறிக்கை, அரசு செய்தி குறிப்பு ஆகியவற்றை விட்டு, விலை மதிக்க முடியாத மனித உயிர்களை காப்பாற்ற குறட்டை விட்டு தூங்காமால் நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.