நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் கீழ்வேளூர் வட்டாரத்திற்கு உட்பட்ட 2024- 2025 ஆண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவி குழு ஊக்குநர் மற்றும் பிரதிநிதிகளுக்கு ஆளுமை பொறுப்புணர்வு மற்றும் புத்தக பராமரிப்பு பயிற்சி 21.10.24 முதல் 23.10.24 வரை முதல் அணியாக கீழ்வேளூர் வட்டார மேலாண்மை அலகு அலுவலகத்தில் நடைபெற்றது.
வட்டார இயக்க மேலாளர் ராஜகோபால் வரவேற்று பேசினார் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது
இதில் மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீரங்கபாணி பயிற்சி அளித்தார். இதில் 15 சுய உதவி குழு ஊக்குநர் மற்றும் பிரதிநிதிகள் சுய உதவி குழு நோக்கம் பஞ்ச சூத்திரம் ஊக்குநர் மற்றும் பிரதிநிதி பொறுப்புக்கள் குழு கூட்டம் உறுப்பினர் பங்கேற்பு சேமிப்பு மற்றும் சந்தா வசூல் சேமிப்பு இடைவெளி உள் கடன் வழங்குதல் வெளிக்கடன் வழங்குதல் பதிவேடுகள் பராமரிப்பு கடன் சுழற்சி சேமிப்பு அதிகரித்தல் உறுப்பினர் வங்கி கணக்கு காப்பீடு சமூக மேம்பாடு செய்தல் குழுக்களின் சிறந்த சாதனைகள் தணிக்கை விவரம் நிதி உள்ளாக்கம் வாழ்வாதார மேம்பாடு பண்ணச் சார்ந்த தொழில்கள் பண்ணை சாரத் தொழில்கள் வங்கி வட்டி மானியம் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
பின்பு உதவி திட்ட அலுவலர் ராஜ்குமார் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுய உதவி குழு ஊக்குநர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது பின்பு அனைத்து பதிவேடுகளை பார்வையிட்டார் பராமரிப்பு முக்கியத்துவம் குறித்து பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
அத்திப்புலியூர் ஊராட்சி நிலப்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ சாய் மகளிர் குழுவின் 7 வகையான பதிவேடுகள் மற்றும் வரவு செலவு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இறுதியில் ஸ்ரீ சாய் குழு பிரதிநிதி பிரியதர்ஷினி மற்றும் ரம்யா நன்றி கூறினர்.