மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, காரைமேடு கிராமத்திலுள்ள சுக்கான்
குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு..
இதுகுறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், காரைமேடு கிராமம், மணல்மேடு பகுதியைச் சேர்ந்த சிறுவன் மாவீரன் (வயது 9) த/பெ. வெற்றிவீரன் மற்றும் சீர்காழி வட்டம், காரைமேடு கிராமம், அமிர்தா நகரைச் சேர்ந்த சிறுவன் சக்தி (வயது 9) த/பெ. பிரகாஷ் ஆகிய இருவரும் கடந்த 24.08.2024 அன்று காரைமேடு கிராமத்திலுள்ள சுக்கான் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் பெற்றோர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். என அந்த அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Super