மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சப்பாத்தி தயாரிக்கும் மிஷினுக்கு காட்டிய அக்கரையை மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறையில் அமைச்சர் மா.சு அக்கரையை காட்டாவது ஏன்?
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு எடப்பாடியார் கொண்டு வந்த திட்டத்தை, திமுக சாதனையாக லேபிள் ஒட்டலாமா?
அதிமுக மருத்துவரணி இணைசெயளாலர் டாக்டர் பா. சரவணன் கேள்வி
மதுரை
அமைச்சர் மா.சு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டதாக செய்தி வந்தது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோய்களிடம் பல்வேறு கருத்துக்களை கேட்பார் என்றும், தமிழகத்தில் பரவிவரும் காய்ச்சல்கள் குறித்து விரிவான அறிக்கை கூறுவார் என்று பார்த்தால் அதில் ஏமாற்றம்தான் மிஞ்சியது.
அதில் குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 412 கோடி அளவில் மருத்துவமனை கட்டிடங்கள், மருத்துவ கருவிகள் கொண்டு வந்தோம் செய்தோம் என்று கூறுகிறார் .
ஆட்சிக்கு வந்து திமுக மூணரை ஆண்டுகள்தான் ஆகிறது இதில் எந்த திட்டங்களை கொண்டு வந்தார்கள்? எடப்பாடியார் ஆட்சியில் தான் 313 கோடி அளவில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் 6 தளங்கள் கொண்ட கூடுதல் கட்டிடங்களுக்கு ஜெயிக்கான் மூலம் நிதி ஒதுக்கப்பட்டது, அதை திமுக அரசு திறந்து வைத்தது எடப்பாடியார் கொண்டு வந்த திட்டங்களை அதை தாங்கள் கொண்டு வந்தது போல ஸ்டிக்கர் ஒட்டி மக்களிடத்தில் தவறான பொய் பிரச்சாரம் அமைச்சர் மா.சு கூறலாமா?
அது மட்டுமல்ல அது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 4.50 லட்சம் மதிப்பில் நோயாளிகளுக்கு சப்பாத்தி போடும் மிஷினை வழங்கி உள்ளோம்,ஒரு நாளைக்கு ஆயிரம் சப்பாத்திகள் தயார் செய்யலாம் என்று அமைச்சர் பெருமையாக கூறுகிறார்
ஆனால் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்பு புறநோயாளிகள் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து அதை மராமத்து செய்ய ஏதாவது அறிக்கை வெளியிட்டாரா? அதேபோல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 4300 படுக்கைகள் உள்ளது இதற்கு குறைந்தபட்சம் 1,177 செவிலியர்கள் மேல் வேண்டும் ஆனால் தற்போது எண்ணிக்கை 569 தான் உள்ளது ஏறத்தாழ 700 பேர் பற்றாக்குறையாக உள்ளனர் அதேபோல உதவி செவிலியர்களை எடுத்துக் கொண்டால் 200 பேர் இருக்க வேண்டும் தற்போது 48 பேர்தான் உள்ளனர் 148 பேர் பற்றாக்குறையாக உள்ளார்கள் .அதேபோல் லேப் டெக்னீசியன்கள் பற்றாகுறையாக உள்ளனர்,இதை எல்லாம் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டாரா?
எல்லாம் விளம்பரம் தான்,இப்படி விளம்பரத்தை மேற்கொண்டு மக்கள் பணியில் கோட்டைவிட்டனர், எடப்பாடியார் ஆட்சியில் முதன்மையாக இருந்த சுகாதாரதுறை ,இன்றைக்கு 12 இடத்திற்கு தள்ளிப் போய்விட்டது.
இன்னமும் கவனம் செலுத்தா விட்டால் சுகாதாரத்துறை அதல பாதாளத்திற்கு சென்று விடும் என கூறினார்.