தினசரி ஏழை, எளியோர்க்கு அன்னதானம் வழங்கி வரும் ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக தீபாவளி திருநாளை முன்னிட்டு, ஆதரவற்ற தாய், தந்தையர்களுக்கு புத்தாடை மற்றும் அறுசுவை அன்னதானத்தை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் கவுன்சிலர் குமாரலிங்கம் வழங்கினார். டிரஸ்ட் பொருளாளர் திருஞானசம்பந்தம் வரவேற்று பேசினார்.
இதில் சிறப்பு விருந்தினர்கள் ஜோஸ் கேட்டரிங் சரவணன், ஆர்.அசோக்குமார், பழனிவேல் ராஜன், ஆர்.எம் குமார், சீடை கம்பெனி சக்திவேல், அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.