தமிழ்நாடு மாநில 50-வது ஜூனியர் பெண்கள் கபடி போட்டியானது திருவண்ணாமலையில் நடைபெறுகின்றது. இப்போட்டில் இருந்து
தேர்வு செய்யப்பட இருக்கின்றவர்கள்
50 வது ஜூனியர் தேசிய கபடி பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வினை ஒட்டி மயிலாடுதுறை மாவட்ட பெண்கள் அணி தேர்ந்தெடுக்கும் நிகழ்வானது, சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இதிலிருந்து 18 மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி மாதானத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.பயிற்சி பெற்றவர்கள் திருவண்ணாமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்ட கபடி செயலாளர் ஜி. ஜான் ஹென்றிஸ் தலைமையிலும், அமைப்புச் செயலாளர் ஆர். பாண்டியன் முன்னிலை வகிக்க, போட்டியினை சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி இயக்குனரும் உதவி தலைமை ஆசிரியருமான எஸ்.முரளிதரன்,இணைச் செயலாளர் வி. சி. ஆசைத்தம்பி ஆகியோர் கபடி போட்டியை துவக்கி வைத்தார்கள்.மேலும், நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர்கள் டி. முரளி, பி.மார்கண்டன், சேகர், சூரியமூர்த்தி, குமரகுரு, சுந்தர், பட்டதாரி ஆசிரியர் அற்புதராஜ், கபடி நடுவர்கள் எஸ். திருமுருகன், ஜி.சிவானந்தம், லட்சுமணன், விக்னேஷ், சுபாஷ்,நெப்போலியன், மற்றும் பயிற்சியாளர்கள், ஏராளமான பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். நிறைவாக எருக்கூர் ஆதி மோகன் நன்றி கூறினார்.