கமல்ஹாசனின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு நற்பணி இயக்க நிர்வாகி சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன் தலைமையில் யானைக்குழாய் பகுதியில் பொதுமக்களுக்கு முட்டை பிரியாணி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை மண்டல செயலாளர் அழகர் தொடங்கி வைத்தார்.
இதில் நிர்வாகிகள் ஆசைத்தம்பி, சிவபாலகுரு, நம்மவர் செந்தில், நாகராஜ், செந்தில்ராஜன், மகாளிப்பட்டி செந்தில், ஷேக்முகமது, பாண்டியன் குணாஅலி, , பூமிராஜா, தங்ககுமார், குணாஅழகர், ஜெயராஜ், முருகன்,செல்வராஜ், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.