திருப்பூரில் வேலைக்கு நேர்காணல் செய்வதாக கூறி பெண்ணை கடத்திய வழக்கில் இருவரை திருப்பூர் தெற்குபோலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், மண்ணரை பகுதியைச் சேர்ந்த கமலி( 28) இவர் ஆன்லைனில் ஒ.எல்.எக்ஸ்.ல் வேலை கேட்டு பதிவு செய்திருந்தார் .கமலியை கடந்த ஏழாம் தேதி நேர்காணல் அழைத்திருந்தனர்
மேலும் நேர்காணலுக்கான இடத்தை ஆன்லைனில் அனுப்பி அந்த இடத்திருக்கு வருமாறு கூறியதை தொடர்ந்து கமலி செரிப் காலனி சென்றுள்ளார். அங்கு சென்றபோது காரில் வந்த இரண்டு நபர்கள் அலுவலகத்தை பார்க்க செல்லலாம். அலுவலகத்தின் சாவி பக்கத்தில்தான் ஒருவரிடம் உள்ளது என காரில் ஏறுமாறு கூறியுள்ளனர். கமலி ஏற மறுக்கவே அருகில் தான் உள்ளது வாருங்கள் மறுபடி இங்கேயே வந்து இறக்கிவிடுகிறோம் என கூறி ஏற்றி சென்றுள்ளனர்.
காரில் ஏறி வெகு தூரம் சென்றதால் சந்தேகமடைந்து கமலி தன்னை இறக்கிவிடுமாறு கூறி சத்தம்போட்டுள்ளார். அப்பொழுது முன் சீட்டில் உட்காந்திருந்த ஒருவர் இறங்கி பின்னால் சீட்டிற்கு வந்து கமலியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளார்.கார் தாராபுரம் சாலையில் உள்ள ஏஞ்சல் கல்லூரி அருகில் சென்றவுடன் கமலி லாவகமாக அருகில் இருந்த நபரின் கையிலிருந்து கத்தியை தட்டிவிட்டு கீழே குதித்துள்ளார். இதில் காயம் ஏற்பட்டு பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இதைதொடர்ந்து கமலி அளித்த புகாரின் அடிப்படையில் திருப்பூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் சாரதி மற்றும் மணிகண்டன் என இருவரை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்தி காரையும் பறிமுதல் செய்தனர்.