வக்பு வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமை தாங்கினார்.
மாநில பொருளாளர் காஞ்சி இப்ராகீம் பேசும்போது, ‘வக்பு வாரிய திருத்த சட்டம் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு தர்மமாக வழங்கப்பட்ட நிலங்களை அபகரிக் கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. வக்பு வாரியத் துக்கான அதிகாரங்களை முற்றிலும் அபகரித்து மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்குவது என்பது முஸ்லிம் வெறுப்பு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழியாகும். இந்த சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கட்டாயம் திரும்ப பெற வேண்டும். அதுவரை போராட்டங்கள் தொடரும்’ என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் யாசர் அரா பத், பொருளாளர் சிராஜ்தீன், துணை தலைவர் ஜாகீர் அப் பாஸ், துணை செயலாளர்கள் ஷாஜகான், காஜா, ஜெய்லானி, ஹனிபா மற்றும் மாணவரணி, தொண்டரணி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், பெண்கள், ஆண்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் துணை செயலாளர் ஷேக் பரீத் நன்றி கூறினார்.