லோக் அதாலத் இந்தியாவின் முதல் திருநங்கை பாரதி கண்ணம்மா காலமானார்
மதுரை விளக்குத்தூண் பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை பாரதிகண்ணம்மா. மமதுரையில் பாரதிகண்ணம்மா என்னும் அறக்கட்டளை மூலம் எண்ணற்ற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி, வேலைவாய்ப்பு என பல மாணவர்கள் பலருக்கும் வாழ்வில் வழிகாட்டியாக இருந்துள்ளார். லோக் அதாலாத் என்னும் மக்கள் நீதிமன்றம் அமைப்பின் இந்தியாவில் முதல் திருநங்கையாக தேர்வு செய்ய பட்டு நீதி துறையில் திறம்பட செயல் பட்டுள்ளார்.
மேலும் திருநங்கைகளின் கல்வி, மருத்துவம்,வேலைவாய்ப்பிற்காக தாய் திட்டத்தின் மூலம உலகின் முதல் பணக்காரர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்து திருநங்கைகளின் வாழ்வியல் புத்தத்தை வழங்கி அவர்களின் வாழ்க்கை முறையை பற்றி விளக்கி உள்ளார்.
ஆங்கிலம் மற்ற மொழிகளில் நல்ல புலமை பெற்ற பாரதிகண்ணம்மா பில்கேட்ஸ் அவர்களிடம் நன்கொடை பெற்று திருநங்கைகளின் திருநங்கைகள் நலனுக்காக சேவை செய்யும் தாய் திட்டத்திற்கு அளித்தார். மதுரை மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பலமுறை சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு பெரும்பான்மை வாக்குகள் பெற்றுள்ளார்.
மண்டல SBI வங்கியின் நிதி ஆலோசகராகவும் பொறுப்பேற்று உள்ளார். திருநங்கை முதல் பட்டிமன்ற பேச்சாளராகவும், சிறந்த மேடைப்பேச்சாளராகவும் ,எழுத்தாளராகவும் இருந்துள்ளார். 1994 ஆண்டில் முதல் மிஸ் கூவாகம் சிறந்த அழகியாக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்.
அவரது நல்லடக்கம் மதுரை தத்தனேரி மயானத்தில் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.