மதுரை கூடல்நகரில் அதிமுக கட்சி கொடியை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
அதிமுக 53-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மதுரை மாநகர் மாவட்டம் மேற்கு 6-ம் பகுதி 2-வது வட்டக் கழகம் சார்பாக கூடல்நகரில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை 6-ம் பகுதி கழகச் செயலாளர் கே.ஆர் சித்தன் சிறப்பாக செய்திருந்தார்.
இந்நிகழ்வில் நிர்வாகிகள் ஜெ.ராஜா, எம்.எஸ்.பாண்டியன், அண்ணாத்துரை, பா.குமார், டாக்டர் வி.பி.ஆர்.செல்வகுமார், திரவியம்,நீதிகாந்த், வட்டக் கழக செயலாளர்கள் ஜஸ்டஸ் ராஜா, நாராயணன், விஜயகுமார், மலைச்சாமி, சுந்தர்ராஜன், கேசவன் மற்றும் நிர்வாகிகள் செல்வம், ராஜேந்திரன், மாரி, ஜெயராஜ்,கவுசல்யா கருப்பையா,வேலு, உமாசங்கர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.