மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரூரல் ஊராட்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் நடைபெற்ற இரண்டாம் கட்டம் ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம் துவக்க விழாவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் , சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
உடன் மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் , குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், மயிலாடுதுறை குழந்தைகள் வளரச்சித் திட்ட அலுவலர் இரா.கிருத்திகா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் குமாரசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் முருகமணி, ஊராட்சிமன்ற தலைவர் தமிழரசன் உடன் இருந்தனர்.