மதுரை தத்தனேரி பகுதியில் மணிக்குறவர் 71 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,குருபூஜை விழா நடைபெற்றது. மேலும் பொதுமக்களுக்கு மாபெரும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
விடுதலை சிறுத்தை கட்சி,நாம் தமிழர் கட்சி,முக்குலத்தோர் எழுச்சி கழகம், தாய் தமிழர் கட்சி, தாய்நாடு மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சியை சேர்ந்த தலைவர்கள் மணிக்குறவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை மன்னன் மணிக்குறவர் விழாக்குழு தலைவர் சந்திரசேகர், துணைத்தலைவர் சுந்தர், பொதுச்செயலாளர் முனீஸ்வரன்,செயலாளர் சேகர் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.