மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பயிற்ச்சி செவிலியர்கள் கலந்துகொணட தூய்மை விழிப்புணர்வு பேரணி மற்றும் தூய்மை பாரத சேவை
மருத்துவகழிவுகளைவேலம்மாள் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பாக மாநகராட்சி குப்பை கிடங்கில் சேர்க்க தனி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது.
தூய்மை பாரத விழிப்புணர்வு எண்ணையில் பயிற்சி மருத்துவர்கள் செவிலியர்கள் 600 பேர் கலந்து கொண்டனர்.
மதுரை சிந்தாமணி ரிங் ரோட்டில் அமைந்துள்ள வேலம்மாள் மருத்துவமனையில் வேலம்மாள் மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சார்பில் தூய்மை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வேலம்மாள் மருத்துவக் கல்லூரி முதன்மை டீன் Dr..ரத்தினவேலு,
டீன் Dr.திருநாவுக்கரசு, இருவரும் தூய்மை விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். துணை முதல்வர் Dr.மகேஷ்கிருஷ்ணா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் மற்றும் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூய்மை பதாகைகள் ஏந்தி வேலம்மாள் பயிற்ச்சி மருத்துவர்கள், செவிலியர்கள் 600 பேர் கலந்து கொண்டனர்.
மேலும் மருத்துவர்கள் மருத்துவமனை வளாகம் சுற்றுப்புறங்களில் உள்ள குப்பைகளை அகற்றி சேகரித்தனர்.
மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு மதுரை மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் மூலம் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடுகள் எதுவும் ஏற்படாத வகையில் தனியாக பிரித்து மருத்துவ கழிவுகளாகவே குப்பை கிடங்கில் கொட்டப்படுவதற்கு வேலம்மாள் மருத்துவமனை சார்பில் தனிவாகனம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வேலம்மாய் முதன்மை டீன் ரத்தினவேலு கூறுகையில் மருத்துவமனை என்பது மிகவும் தூய்மையான பகுதி அந்த தூய்மை பகுதியிலும் தூய்மையை பயன்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் இன்று விழிப்புணர்வு பேரணி ஏற்படுத்தப்பட்டது.
இது மருத்துவமனையில் மட்டும் இல்லாமல் உங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் இதன் மூலம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என கூறினார்.
டீன் டாக்டர் திருநாவுக்கரசு கூறுகையில் இந்த வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவ வளாகங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் .
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள்,அவர்களின் உறவினர்கள் மூலம் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவக் கல்லூரிகளை தனியாக பிரித்து குப்பை கிடங்கில் சேகரிக்கப்படுகிறது.சுகாதாரம் என்பது மருத்துவமனை மட்டுமல்ல நம் வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் தான் அவற்றை தூய்மையாக வைத்துக் கொள்ள மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம் என டீன் Dr.திருநாவுக்கரசுக்கு கூறினார்.