கொத்தங்குடியில் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை கேட்டு மனு கொடுக்கும் ஆர்பாட்டம் நடைப்பெற்றது…
நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை கேட்டு மனு கொடுக்கும் ஆர்பாட்டம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடைப்பெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தலைஞாயிறு ஒன்றியம் கொத்தங்குடி கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக மனுக்கொடுக்கும் ஆர்பாட்டம் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் மணியன் தலைமையில் நடைப்பெற்றது.
தமிழக அரசு முதியோர் மற்றும் விதவை பெண்சன் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தகுதியான அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்பு கிராம நிர்வாக அலுவலரிடம் மனுக்களை வழங்கினர்.
இதில் ஒன்றிய செயலாளர் ராஜகுரு, ஒன்றிய கவுன்சிலர் ஞானசேகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் முருகையன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் அலெக்சாண்டர், கிளை செயலாளர் சங்கர் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.