ஜூடோ போட்டியில் வெற்றி பெற்ற மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவி
மதுரை காமராஜர் பல்கலை மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான ஜூடோ போட்டிகள் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூயில் நடைபெற்றது.
இதில் 48 கிலோ பிரிவில் மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் மகளிர் கல்லூரியின் பி.காம்.சி.ஏ மாணவி திவ்யஸ்ரீ மூன்றாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற திவ்யஸ்ரீ யை கல்லூரி தாளாளர் ஜனரஞ்சனி பாய், செயலாளர் கலைவாணி, முதல்வர் கோமதி, துணை முதல்வர் முனைவர் மஹிமா, நிர்வாக அதிகாரி ரேகா ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.