மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரைச் சேர்ந்த மகாதேவன் ராஜேஸ்வரி என்ற தம்பதிகள் மயிலை கருணை கரங்கள் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஐந்து வருடங்களாக சாலை ஓரங்களில் வசித்து வரும் ஆதரவற்ற முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகின்றனர்.
மேலும், நன்கொடையாளர்கள் மற்றும் முகநூல் மூலமாக,தங்களது நண்பர்களின் உதவியோடு, ஆதரவற்று இறந்து போன இதுவரை 64 பேர் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.
கடந்த 12 ஆம் தேதி அன்று மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில், மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்த ஜெயா வயது 65 என்ற பெண் முதியவர் மற்றும் மயிலாடுதுறை சூரக்கட்டளை தெருவில், ஆதரவற்ற நிலையில் இருந்த இந்துபாய் வயது 75 என்ற மற்றொரு பெண் முதியோரையும், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, சா சுகிர்தாதேவி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பரிந்துரையோடு, இருவரையும் திருச்சி கங்காரு முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளனர்.
இந்நிகழ்வின் போது சமூக நலத்துறையை சார்ந்த வழக்கு பணியாளர்கள் பவ்யா மற்றும் அர்ச்சனா உடன் இருந்தனர்.