நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் கொத்தங்குடியில் உள்ள தொடக்கப்பள்ளியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.வி.சௌந்தரராஜன் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் வடக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடைவடிக்கைகளை சரியாக முறையில் பொதுமக்கள் கையாள வேண்டும் எனவும் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் பேசினர்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி சேக், சமூக ஆர்வலர் மகேந்திரன், ஊராட்சி மன்றத் துணை தலைவர் கண்ணகி பாஸ்கர், ஊராட்சி செயலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.