மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளதை கொண்டாடும் விதமாக, மதுரை காளவாசல் மண்டலில் மாநகர் மாவட்ட துணைத்தலைவர் ஜி.ராஜ்குமார் தலைமையில் கோச்சடை முத்தையா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதில் தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் பாலமுருகன்,காளவாசல் மண்டல் பொதுச்செயலாளர் ஸ்ரீராம் மற்றும் நிர்வாகிகள் உமாமகேஸ்வரி, மயில்வாகனன்,உமாராணி, கண்ணன், கணேஷ், வேல்முருகன்,வல்லத்தரசு, திலக், அருண்பிரசாத், சதீஷ், லிங்கேஸ்வரி, கண்ணன் சாமி, கமலவேணி,மீனாட்சி, கிருஷ்ணன், இளைஞரணி சுபாஷ்,சாய் கிருஷ்ணமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.