“சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அறிவியல் மற்றும் கணித அணுகுமுறைகள் ” என்ற தலைப்பில் ஒன்றிய அளவில் பள்ளிகளில் போட்டிகள் நடத்தப்பட்டு,அதில் முதல் மூன்று இடங்களை பெற்ற குழுக்களுக்கு மாவட்ட அளவிலான போட்டி கடந்த 22 ஆம் தேதி அன்று மயிலாடுதுறை வட்டார வள மையத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில், ஐந்து ஒன்றியங்களில் உள்ள 15 பள்ளிகளிலிருந்து 45 மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடக்க நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரத் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் சாந்தி (இடைநிலை),குமரவேல் (தொடக்கல்வி) ஆகியோர் தலைமையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் திருஞானசம்பந்தம் முன்னிலையில் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில், STEM மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனைத்து ஒன்றிய STEM கருத்தாளர்கள், பயிற்றுநர்கள், தலைமை ஆசிரியர்கள், மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டி ஏற்பாட்டிணை மயிலாடுதுறை ஒன்றிய மேற்பார்வையாளர் முருகையன் மேற்கொண்டார்.
இறுதியாக STEM மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தா ராஜேந்திரன் நன்றி கூறினார்.
STEM மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசீலன், மீனாட்சி , சர்மிளா,கவிதா, ஜெயபாரதி, சிவமணி, ராஜாராமன், ரம்யா, கிருத்திகா
அபர்ணா, பிரவீனா ஆகியோர் பங்கேற்றனர்.