துப்புரவு தொழிலாளர்களுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் விருந்து கொடுத்து பாராட்டு.
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் காரைக்கால் லட்சுமிகாந்தன் வயது 81 அவர்கள் கூறைநாடு பகுதியில் நகராட்சியில் துப்புரவு பணி மேற்கொண்டு வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து மதிய விருந்து அளித்து பாராட்டு செய்தார்.
மிகப்பெரிய அளப்பரிய பணியை தினமும் மேற்கொண்டு வரும் துப்புரவு பணியாளர்களின் சேவை பெரிதும் போற்றப்பட வேண்டும், அவர்கள் ஒரு நாள் இல்லையேல் சுகாதாரம் முற்றிலும் முடங்கி பல்வேறு பிரச்சனைகள் நோய்கள் உருவாகும் என்பது உறுதி.
அப்படிப்பட்ட புனிதமான பணியை செய்து வருகின்ற அனைத்து துப்புரவு பணியாளர்களும் போற்றப்பட வேண்டியவர்கள். குறிப்பாக அவரவர் பகுதியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை அவ்வப்பொழுது ஊக்குவித்து பாராட்டி மகிழ்வித்தால் அனைவருக்கும் சிறப்புடையதாக அமையும். மக்களின் நலனுக்காக தங்களது உடலை வருத்தி நேரம் காலம் பார்க்காமல், மெழுகுவத்தி போல பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாராட்டுவோம். அவர்களின் குடும்பத்தினருக்கும் நம்மால் ஆன உதவிகளை அவ்வப்பொழுது அனைவரும் செய்ய வேண்டும் என்று துப்புரவு பணியாளர்களுக்கு மதிய விருந்து அளித்த ஓய்வு பெற்ற ஆசிரியர் லட்சுமிகாந்தன் தனது விருப்பத்தை மகிழ்ச்சியுடன்தெரிவித்தார்.
இந்த விருந்து வழங்கும் நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், நகர் மன்ற உறுப்பினர் ஹேமாவதி, ரயில்வே துறை பொறியாளர் பிரபா என்கின்ற நடராஜன், வேம்பு நடராஜன், வளர்மதி, சோமாஸ்கந்தன், சிவசக்தி, காசி விஸ்வநாதன், மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் பங்கேற்றனர். 50க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு பொன்னாடை போற்றி, சைவ அசைவ விருந்து வழங்கப்பட்டது.