மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக இந்திய அரசியலமைப்பு இயற்றிய தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் முதன்மை நீதிபதி சிவகடாட்சம் அறிவுறுத்தலின் பேரில், மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள பெட்கிராட் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி சரவணன் செந்தில்குமார் குத்துவிளக்கு ஏற்றி அரசியல் அமைப்பு சட்டத்தின் விளக்கங்களை கூறி விழிப்புணர்வு உரையாற்றினார். மேலும் அவர் உறுதிமொழி வாசித்தார்.
இலவச சட்ட உதவி மையப் பட்டியல் வழக்கறிஞர் திருமதி.வசந்தி சட்ட விளக்கங்கள் குறித்து பேசினார்.
பெட்கிராட் நிர்வாக இயக்குனர் எம் சுப்புராம் அவர்கள் தலைமையில், தலைவர் கிருஷ்ணவேணி வரவேற்புரையாற்றினார்.சரஸ்வதி நாராயணன் கல்லூரி முன்னாள் முதல்வர் எம்.கண்ணன் பெட்கிராட் பொருளாளர் சாராள்ரூபி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பெட்கிராட் நிறுவன பயிற்சி மாணவர்கள் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் சார்பு நீதிபதி சரவணன் செந்தில்குமார் அவர்களிடம் கேட்டு விளக்கங்களை அறிந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியாளர் கண்ணன் நன்றியுரை கூறினார்.